Sunday, September 2, 2012

எனக்குள் தோன்றியது

வாழ்கை என்பது
சொன்னால் கேட்கவேண்டும்
கேட்டால்  சொல்லவேண்டும்
முடிந்தால் செய்ய வேண்டும்
செய்தால் முடிக்கவேண்டும்

சாப்பிடமுடியும் என்றபோது சமைக்க தெரியாது
சமைக்க தெரிந்தபோது சாப்பிடமுடியாது

அனுபவிக்க வயசு இருக்கும்போது ஆஸ்தி இல்லை
ஆஸ்தி அடையும்போது அனுபவிக்க வயசு இல்லை


எட்ட இருந்தால் கிட்ட உறவு.
கிட்ட இருந்தால் முட்ட உறவு

சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய தருணத்தில் சொல்லவேண்டிய விதத்தில் சொல்லவிடுங்கள்.
இல்லையேல் ஏண்டா சொல்லாமல் விட்டோம் என்ற நினைவும் ஏண்டா சொல்லவில்லை என்ற கேள்வியும் தான் நிற்கும்

தனக்காக வாழுபவர்கள் பிறரை தனக்காக பயன் படுத்தி கொள்வார்கள்
பிறர்க்காக வாழுபவர்கள் தன வாழ்கையை பிறர் வாழ பயன்படுத்துவார்கள்.

நடக்கிறவன் நிற்கமாட்டான். நிக்கிறவன் நடக்கமாடான்.
கேட்கிறவன் பேசமாட்டான்; பேசுகிறவன் கேட்கமாட்டான்
சொல்கிறவன் செய்யமாட்டான். செய்பவன் சொல்லமாட்டான்

மதியுங்கள் மதிக்கப்படுவீர்கள்
வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள்
சொல்லுங்கள் சொல்லப்படுவீர்கள்
பேசுங்கள் பேசப்படுவீர்கள்
தூற்றுங்கள் தூற்றப்படுவீர்கள்
செய்யுங்கள் செய்யப்படுவீர்கள்
உதவுங்கள் உதவப்படுவீர்கள்
எசுங்கள் ஏசப்படுவீர்கள்
ஏமாற்றுங்கள் ஏமாற்றப்படுவீர்கள்

தாங்க யாரும் இல்லை என்றால் தானாக வளருவீர்கள்

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒருவரை குறை கூறும் முன்பு நாம் அதேபோல சந்தர்பத்தில் என்ன செய்தோம் என்பதை நினைத்து பார்த்தல் அவசியம்

இன்றைய சிந்தனை
பிடித்தது கிடைத்தால், கிடைத்தது நிலைக்கும் என்ற நிச்சியம் இல்லை. ஆனால் கிடைத்ததை பிடித்து கொண்டால் நினைத்தது கிடைக்க வாய்ப்பு உண்டு


No comments: