இன்றைய கால கட்டத்தை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. என்ன எழுதுவது என்று யோசித்து கொண்டிருந்தேன். மனதில் தோன்றியவை ..... எழுதிவிட்டேன்
மனம்கள் மறுத்துவிட்டன
கோபங்கள் கொந்தளிக்கின்றன
பாபங்கள் பரிகசிக்கின்றன
தாபங்கள் தத்தளிக்கின்றன
நேசங்கள் நச்சரிகின்றன
ஆணவங்கள் ஆக்ரோஷிக்கின்றன
கடமைகள் கட்டபடுகின்றன
உணர்வுகள் உந்தபடுகின்றன
பாமரர்கள் பரிதவிக்கின்றனர்
சொத்துக்கள் சுரண்டபடுகின்றன
ஆவேசங்கள் அடக்கபடுகின்றன
வாக்குகள் வாங்கப்படுகின்றன
செல்வங்கள் செழிக்கின்றன
பட்டினி பரப்பபடுகின்றன
எண்கள் சொல்லப்படுகின்றன
விலைகள் விரிவாக்கபடுகின்றன
மண்கள் விர்க்கபடுகின்றன
ஓலங்கள் ஒடுக்கப்படுகின்றன
செய்முறைகள் செய்யப்படுகின்றன
விதிமுறைகள் விடப்படுகின்றன
செல்வந்தர்கள் சேருகின்றனர்
ஏழைகள் எமாற்றபடுகின்றனர்
சொல்லுங்கள் யாரேனும் விடிவுகாலந்தன் உண்டா.............அய்யாகோ .. வாழ்க பாரதம் வளர்க நம் பெருமை.
No comments:
Post a Comment